'டகால்டி' வேலையை முடித்த சந்தானம்! - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 23, 2019 10:39 AM
சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியான படம் 'ஏ1'. ஜான்சன் இயக்கிய இந்த படத்தை சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சந்தானம் நடித்துள்ள படம் 'டகால்டி'. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ரித்திகா சென், ராதாரவி, தருண் அரோரா, சந்தான பாரதி, மனோ பாலா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை 18 ரீல்ஸ் சார்பாக எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்ய விஜய் நரேன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.. இந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
@vijayanans #18Reels @SPChowdhary3 @SenRittika @iYogiBabu @Vijaynarain @editorsuresh @dopdeepakpadhy @jacki_art @silvastunt @shobimaster @Vmuralee31 @glamoursathya05#Dagaalty 👍 pic.twitter.com/VzF8cTDsxx
— Santhanam (@iamsanthanam) September 22, 2019