www.garudabazaar.com

40 வருட ரசிகர் சுதாகர் மரணம்.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! உருக்கமான வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

Super Star Rajinikanth Attending Sudhakar Funeral

Also Read | கைக்குழந்தையாக அமீன்😍.. "எனக்கு ஆசிரியராகவும்".. பிறந்தநாளில் பகிர்ந்த Throwback போட்டோ!

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். முழு வீச்சில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Super Star Rajinikanth Attending Sudhakar Funeral

ஜெயிலர் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "லால் சலாம்" படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லால் சலாம் படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுதாகர் மரணம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Super Star Rajinikanth Attending Sudhakar Funeral

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுதாகர், தனது உடல்நிலை மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் செய்யும் மருத்துவ உதவிகள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், " எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர் ரஜினிகாந்த். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார், அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்." என குறிப்பிட்டு இருந்தார்.

இச்சூழலில் சுதாகர் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். அவருடைய வீட்டிற்கு சென்று இந்த அஞ்சலியை ரஜினிகாந்த் செலுத்தி உள்ளார். 40 ஆண்டு கால ரசிகரான சுதாகரின் உடலுக்கு கைக்கூப்பி ரஜினிகாந்த் மரியாதை செலுத்திய காட்சி உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | துணிவு படத்தில் 'No Guts No Glory' வாசகம் ஏன்?.. H. வினோத் கொடுத்த செம விளக்கம்!

40 வருட ரசிகர் சுதாகர் மரணம்.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! உருக்கமான வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Attending Sudhakar Funeral

People looking for online information on Rajinikanth, Sudhakar Funeral, Super Star Rajinikanth will find this news story useful.