www.garudabazaar.com

VIDEO: நயன்தாராவுக்கு G.P. முத்து எழுதிய கடிதம்.. அவரோட ஆசையே இது தானாம்! EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

G.P. முத்து நடிகை நயன்தாராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Gp Muthu wish to see Nayanthara and Take photos with her

Also Read | Love Today படத்துக்கு முதல்ல வச்ச டைட்டில் இது தான்.. நடிகர் சத்யராஜ் EXCLUSIVE!

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர். இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது. 

டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

Gp Muthu wish to see Nayanthara and Take photos with her

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை.

தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் G.P. முத்து என்பது குறிப்பிடத்தக்கது

Gp Muthu wish to see Nayanthara and Take photos with her

தற்போது சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Gp Muthu wish to see Nayanthara and Take photos with her

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகர் ஜி.பி‌.முத்து அளித்துள்ளார். அந்த பேட்டியில் நடிகை நயன்தாராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "மதிப்பிற்குரிய நயன்தாரா அக்காவுக்கு பாசமாக எழுதும் ஜி.பி. முத்து. எனது ரொம்ப நாள் ஆசை, உங்க கூட ஒரு போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற வேண்டும் என மிகவும் ஆசைப்படுகிறேன். நீங்கள் சேலை கட்டி இருக்கும் போது உங்களை மிகவும் பிடிக்கும். இப்படிக்கு ஜி.பி. முத்து" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | 'SURYA 42'.. சாதனை விலைக்கு மிக முக்கிய உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! செம்ம ரெக்கார்டு

VIDEO: நயன்தாராவுக்கு G.P. முத்து எழுதிய கடிதம்.. அவரோட ஆசையே இது தானாம்! EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Gp Muthu wish to see Nayanthara and Take photos with her

People looking for online information on GP MUTHU, Nayanthara will find this news story useful.