www.garudabazaar.com

“இந்த விசயத்துல அசிம் & விக்ரமன் மாதிரி இருந்துருக்கணும்.!”.. மணிகண்டா ராஜேஷ் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

should be like azeem vikraman Bigg Boss Manikanda Rajesh

Also Read | Sunny Leone : தன்னுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டபோது உருகி அழுத ரசிகை.! எமோஷனல் ஆன சன்னி லியோன்.!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

should be like azeem vikraman Bigg Boss Manikanda Rajesh

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

should be like azeem vikraman Bigg Boss Manikanda Rajesh

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு மணிகண்டா ராஜேஷ் பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், “பிக்பாஸ் வீட்டில் ஒருமுறை மைனாவிடம் எனக்கு மட்டும் கைதட்டவில்லை என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அந்த அரங்கில் ஆடியன்ஸ் கைதட்டுவது யாருடன் சேர்த்து காண்பிக்கப்படுதோ, அவருடன் சேர்த்துதான் பார்வையாளர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் உண்மையில் உங்களுக்குதான் கைதட்ட வில்லையா? நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்? அங்கு என்ன நடந்தது?” என்று கேட்கப்பட்டது.

should be like azeem vikraman Bigg Boss Manikanda Rajesh

இதில், “பிக் பாஸ் வீட்டுக்குள் நான் அனைவரிடமும் பிரண்ட்லியாகவே பழகினேன். விக்ரமனை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு தனி ஜோனில் இருப்பார். அசிமை எடுத்துக்கொண்டால், அவன் எப்போதும் தனியாக இருப்பான். இவர்களுக்கு மற்றவர்களை எதிர்த்து கேள்வி கேட்கவும் அதிகம் கருத்து பேசவும் வாய்ப்புகள் இருந்தது. அதே சமயம் சக போட்டியாளர்களுடன் இவர்களுக்கான உறவு என்பது இடைவெளியுடனேயே இருந்தது. விக்ரமன் ஷிவினுடன் பெரும்பாலும் பேசுவார். ஆனால் நான் அனைவரிடமும்  பழகினேன். ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். ஒருமுறை அசிமிடம் நான் கிசு கிசு என்று சொல்லிக் கொண்டிருந்தேன் , கிட்டத்தட்ட 70 வது நாள் அது.. நான் இப்படி இருப்பது தான் தவறோ.. நான் தப்பு பண்ணி விட்டேனோ.. வேற மாதிரி கேமை ஆடி இருக்கலாமோ.. என்று கூறினேன்.

ஒருவேளை நானும் அப்படி தனியாக கேம் ஆடியிருக்கலாமோ என்னவோ தெரியவில்லை. ஆனால் வெளியே வந்த பிறகு தான் தெரியவந்தது, எனக்கும் விக்ரமனுக்கும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்ததால், அவை காரணமாகவும் நான் வெளியேறி இருக்கிறேன் போல என்று உணர்ந்தேன்.” என குறிப்பிட்டார்.

Also Read | Bigg Boss : விக்ரமனை பிடிக்காதா ? மனம் திறந்த மணிகண்டா ராஜேஷ்..! Breaking Interview!

“இந்த விசயத்துல அசிம் & விக்ரமன் மாதிரி இருந்துருக்கணும்.!”.. மணிகண்டா ராஜேஷ் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

should be like azeem vikraman Bigg Boss Manikanda Rajesh

People looking for online information on Bigg boss, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Manikanda Rajesh Vikraman will find this news story useful.