www.garudabazaar.com

"என்கிட்ட இந்த பாச்சா எல்லாம் பலிக்காது".. விக்ரமன் முடிவால் அசிம் அதிருப்தி!!.. பரபர Bigg Boss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Azeem and vikraman clash in awards task bigg boss

Also Read | "நான் பூமர் கிடையாது, உங்க புரிதலே தப்பு".. Task-ல் அமுது கொடுத்த விருது.. விக்ரமன் ரியாக்ஷன்

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்றிருந்தது. நிறைய கடினமான போட்டிகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி இருந்தார்கள்.

Azeem and vikraman clash in awards task bigg boss

மிதிவண்டி டாஸ்க், பிரெட் டாஸ்க், Debate டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது. இப்படியாக தற்போது Ticket To Finale டாஸ்க்கும் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

அது மட்டுமில்லாமல், இந்த TTF டாஸ்க்குகளுக்கு இடையே ஏராளமான் விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்கள் கூட அரங்கேறி இருந்தது. ஆனாலும் விளையாட்டு முடிந்த பின்னர், அனைவரும் மீண்டும் பழையது போல உற்சாகமாக இருக்கவும், கலகலப்பாக ஒருவரை ஒருவர் ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.

Azeem and vikraman clash in awards task bigg boss

இதற்கிடையே, தற்போது BB Critics விருதுகள் வழங்கப்படுகிறது. மற்ற சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் பலரும் பல விதமான விருதுகளை தங்களுக்கு தோன்றும் நபர்களுக்கு கொடுத்து கொண்டிருக்க, Cringe என்ற விருதை அசிமுக்கு கொடுக்கிறார் விக்ரமன்.

Cringe என்ற விருதை அசிமுக்கு கொடுப்பதாக விக்ரமன் அறிவிக்கும் நிலையில், இது பற்றி பேசும் அவர், "இதனை அசிமுக்கு கொடுக்கிறேன். பிறரை வந்து நீங்க இகழ்றீங்கல்ல. அது ரொம்ப Confident-ஆ நீங்க பண்றீங்க. அது கண்டிப்பா Cringe-ஆ தான் இருக்கும்" என விக்ரமன் தெரிவிக்கிறார்.

Azeem and vikraman clash in awards task bigg boss

இதற்கு பதில் சொல்லும் அசிம், "அது உங்களுக்கு அப்படி Cringe-ஆ தெரியலாம். அத நீங்களே மாட்டிக்கோங்க. என்கிட்ட இந்த பாச்சா எல்லாம் பலிக்காது. அது நீங்களே மாட்டிக்கோங்க. உங்களுக்கு பொருத்தமா இருக்கும். நீங்க அடிக்கிற சப்பைக்கும், Cringe-க்கும் புரிஞ்சுக்கோங்க" என கிரீடத்தை விக்ரமனையே மாட்டும் படி அறிவுறுத்துகிறார்.

இதனைக் கேட்டதும் பதில் சொல்லும் விக்ரமன், "சப்ப கட்டு நீங்க தான் இப்ப கட்டிட்டு இருக்கீங்க" என குறிப்பிட இது சிறிய விவாதத்தையும் உருவாக்கி இருந்தது. இறுதியில், "போங்க விக்ரமன். தலையில மாட்டிட்டு போய் வேலையை பாருங்க" என்றும் அசிம் குறிப்பிடுகிறார்.

Also Read | "அந்த வார்த்தையை Avoid பண்ணு மச்சான், அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கு".. அசிம் செயலால் ADK ஆவேசம்

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and vikraman clash in awards task bigg boss

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Myna Nandhini, Vikraman will find this news story useful.