www.garudabazaar.com

துணிவு படத்தில் G.P. முத்து.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! செம சர்ப்ரைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

BIGGBOSS GP Muthu Acted in Ajith Kumar Thunivu Movie

Also Read | நடிகர் RK சுரேஷ் மனைவியின் வளைகாப்பு.. நேரில் வாழ்த்திய சினிமா & அரசியல் பிரபலங்கள்!

வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

BIGGBOSS GP Muthu Acted in Ajith Kumar Thunivu Movie

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

BIGGBOSS GP Muthu Acted in Ajith Kumar Thunivu Movie

இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இரண்டாவது சிங்கிள் பாடல் காசேதான் கடவுளடா பாடலை வைசாக் எழுதி பாடியுள்ளார். மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

BIGGBOSS GP Muthu Acted in Ajith Kumar Thunivu Movie

இந்நிலையில் துணிவு படத்தில் யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து நடித்துள்ளார் என  தகவல்கள் வெளியாகி உள்ளன.  துணிவு படத்தில் ஏற்கனவே மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி, பிரேம், ஜி. எம். சுந்தர், வீரா, அமீர், பாவனி, பக்ஸ், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

Also Read | மெக்காவுக்கு புனித பயணம் செய்த நடிகை மும்தாஜ்.. கண்ணீர் மல்க இறை வழிபாடு!

துணிவு படத்தில் G.P. முத்து.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! செம சர்ப்ரைஸ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

BIGGBOSS GP Muthu Acted in Ajith Kumar Thunivu Movie

People looking for online information on Ajith Kumar, Bigg boss gp muthu, GP MUTHU, Thunivu will find this news story useful.