www.garudabazaar.com
iTechUS

வீட்டுக்குள்ள விவாதமாகும் அசீமின் டாஸ்க்.. போறபோக்குல GP முத்து ஒன்னு சொன்னாரு பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

GP Muthu and other contestants Talks about Azeem Makeup

Also Read | TRP பத்தி பிசியாக பேசிக்கொண்டிருந்த மைனா.. பிக்பாஸ் அடிச்ச டைமிங் கமெண்ட்

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

GP Muthu and other contestants Talks about Azeem Makeup

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரின் மற்றும் நிவாஷினி ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இதனிடையே, இந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என்றும் பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தார். கடந்த 3 நாட்களாக அசிம் இதே கெட்அப்பில் வலம் வரும் நிலையில், இந்த டாஸ்க்கை நிறுத்துமாறும் தலை சீவ அனுமதிக்கும் படியும் தொடர்ந்து பிக் பாஸிடம் அறிவுறுத்தியும் வந்தார். ஆனாலும் தொடர்ந்து லுங்கி மற்றும் பனியனுடன் தான் பிக் பாஸ் வீட்டில் அவர் வலம் வந்த வண்ணம் இருக்கிறார்.

GP Muthu and other contestants Talks about Azeem Makeup

இதனிடையே, அசிம் தற்போது டாஸ்க்கை மீறி, யாருக்கும் தெரியாமல் மேக்கப் போட்டுக் கொண்டதாக போட்டியாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதாவது பாத்ரூமில் Foundation இருந்ததாக மைனா சக போட்டியாளர்கள் மத்தியில் தெரிவித்து, "இத யாரு பாத்ரூம்ல வெச்சா?" என்றும் கேட்கிறார். அப்போது அனைவரும் அசிம் யாருக்கும் தெரியாமல் பாத்ரூமில் மேக்கப் போட்டிருப்பார் என்றும் அவர் தான் Foundation-ஐ அங்கே வைத்திருப்பார் என்றும் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமில்லாமல், அசிம் மேக்கப் போடவில்லை என்பதை நிரூபிக்க Tissue கொண்டு முகத்தை துடைக்கவும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் கிச்சன் பகுதியில் ஷெரினா, ஷிவின், தனா ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது தனா,"இப்போ தான் உன் மூளை வேலை செஞ்சிருக்கு" என ஷிவினிடம் சொல்கிறார். அதற்கு," ஏன் சூதானமா தப்பிச்சதுக்கா" என்றபடி ஷிவின் சிரிக்கிறார்.

GP Muthu and other contestants Talks about Azeem Makeup

தொடர்ந்து பேசும் ஷிவின்,"பாவமா இருந்துச்சுப்பா அதை பார்த்த உடனேயே" என்கிறார். அப்போது ஷெரினா,"உள்ள தானே பண்ணிருக்காங்க. பார்த்ததில்லை தானே?" என்கிறார். இதனிடையே மைனா,"அவருகிட்ட என்ன அண்ணா முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்குனு கேட்டேன். அப்போவே ஒரு மாதிரி ஆகிட்டாரு" என சொல்ல, "நான் வரும்போது சைடுல போய்ட்டாரு பாவம்" என்கிறார் ஷெரினா.

இதனிடையே அங்குவரும் GP முத்து," மேக்கப் நல்லா போட்ருக்காரு. நம்ம மூஞ்சியும் நல்லா இருக்கணும்னு தோணும்ல" என்கிறார். அப்போது தனா,"நாம எல்லோரும் வரோம்ல அதுனால செஞ்சிருப்பாரு. இருந்தாலும் லுங்கி பனியனோட தானே இருக்காரு. அதுனால ப்ராப்ளம் இல்ல" என்கிறார். இப்படி அசீமின் டாஸ்க் பற்றிய விவாதங்கள் வீட்டுக்குள் சூடு பிடித்துள்ளது.

Also Read | "உங்க வீட்ல பேசப்போறாங்க".. கதிரவனுடைய தோழி பற்றி குயின்சி சொன்ன விஷயம்..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu and other contestants Talks about Azeem Makeup

People looking for online information on Azeem, Azeem Makeup, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Vijay tv will find this news story useful.