www.garudabazaar.com
iTechUS

தனியா பேசிட்டு நின்ன அசிம், மணி.. Bigg Boss கொடுத்த பகிரங்க Warning.. "நடுவுல என்ன நடந்துச்சு?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Bigg Boss warning to manikanta rajesh while speaking with azeem

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி உள்ளிட்டோர் சர்ப்ரைஸாக நுழைந்துள்ளனர். இதில் அவர்கள் அனைவரும் உள்ளே தொடர்ந்து விளையாடி கொண்டிருக்கும் போட்டியாளர்களை பாராட்டியும் நிறைய கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மணிகண்டா மற்றும் அசிம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் பிக் பாஸ் கொடுத்த வார்னிங் தொடர்பான விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.

Bigg Boss warning to manikanta rajesh while speaking with azeem

அப்போது அசிமிடம் பேசும் மணிகண்டா, "எங்கேயுமே விட்டுவிடாதே உன்னை. கடைசி வாரம்லாம் ரொம்ப சோர்ந்துட்ட. கமல் சார் எபிசோடுக்கு அப்புறமா" என தெரிவித்ததும் இதற்கு விளக்கம் கொடுக்கும் அசிம், "Finale போறதுக்கு தகுதி இல்லைன்னு கேட்கும் போது எல்லாரும் என் பேரை சொன்னாங்க. நீ ஃபர்ஸ்ட்ல இருந்து என்ன பார்த்துட்டு இருக்கே.

Bigg Boss warning to manikanta rajesh while speaking with azeem

எவ்வளவு விஷயம் என்ன பத்தி சொல்லி இருக்காங்க, நான் அந்த நெகட்டிவ்ஸ் எல்லாம் பிளஸ்ஸா தான் எடுத்திட்டு போவேன். போன வாரம் என்னடா இது ஒட்டுமொத்த பேரும் சொல்றாங்கன்னு இருந்துச்சு. அப்போ ஏடிகே எல்லாம் ரொம்ப பொங்கி பேசினார். அத பாசிட்டிவ்வா தான் நான் எடுத்துக்கிறேன்னு வச்சுக்கோ. இருந்தாலும் என்னடா நம்மள பத்தி மட்டும் பேசுறாங்களேன்னு Odd-ஆ ஃபீல் ஆச்சு" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Bigg Boss warning to manikanta rajesh while speaking with azeem

அப்போது மணிகண்டா எதையோ பேச முற்பட, பட்டென எச்சரித்த பிக் பாஸ், "மணி வெளியே இருக்கிற தகவல் எதையும் ஷேர் பண்ணாதீங்க" என பகிரங்கமாக குறிப்பிடவும் செய்தார். இதற்கு பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்கவும் செய்திருந்தார் மணிகண்டா. முன்னதாக, வெளியே வைரலாகும் பிக் பாஸ் வீடியோக்கள் குறித்தும் அசிமிடம் மணிகண்டா பகிர்ந்து கொண்டார் என்பதால் தான் பிக் பாஸ் வார்னிங் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss warning to manikanta rajesh while speaking with azeem

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Manikanta Rajesh will find this news story useful.