பாலைவன பகுதியில் AR ரஹ்மான்.. "அட, இது தான் விஷயமா?" Photo பகிர்ந்து சீக்ரெட் உடைத்த பிருத்விராஜ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள நடிகரான பிருத்விராஜ், ஏ.ஆர். ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Prithviraj share photo with ar rahman from aadujeevitham set

Also Read | "டியர் KK, ஏன் இவ்ளோ அவசரம்?".. பாடகரின் திடீர் மரணத்தால் கலங்கிய ஏ.ஆர். ரஹ்மான்..

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். படத்திற்கு படம், வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் கதைக்களத்தை தேர்வு செய்யும் பிருத்விராஜ் நடிப்பில், கடைசியாக 'ஜனகணமன' திரைப்படம், கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியன்று, திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், நாளை (02.06.2022) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஆடுஜீவிதம் ஷூட்டிங்

இதனைத் தொடர்ந்து, தனது அடுத்த திரைப்படத்தில் நடித்து வருவதில், நடிகர் பிருத்விராஜ் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, பிளஸ்சி இயக்கி வரும் 'ஆடுஜீவிதம்' படத்தில் பிருத்விராஜ் தற்போது நடித்து வருகிறார். இதற்காக, ஜோர்டான் பகுதியில் 'ஆடுஜீவிதம்' படக்குழு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனை உறுதி செய்யும் வகையில், புகைப்படம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிருத்விராஜ் பகிர்ந்துள்ளார்.

Prithviraj share photo with ar rahman from aadujeevitham set

பாலைவனத்தில் ஏ.ஆர். ரஹ்மான்

முன்னதாக, ஆடுஜீவிதம் படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலைவனத்தில் ஒட்டகங்கள் கூட்டமாக நிற்கும் புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "இன்னும் இரண்டு நாட்களுக்கு ஃபோன் இல்லை. இன்டர்நெட் கிடையாது. ஒட்டகங்களும் ஆடுகளும் தான் நண்பர்கள். #aadujeevitham" என குறிப்பிட்டிருந்தார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

நன்றி சொன்ன பிருத்விராஜ்

'ஆடுஜீவிதம்' படத்தின் பணிகள் தொடர்பாக, ஏ.ஆர். ரஹ்மான் அங்கு சென்றிருக்கலாம் என ரசிகர்கள் கருதி வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிருத்விராஜ், "ஜோர்டானின் வாடி ரம் பகுதி வரை, எங்களை ஊக்குவிக்க வந்துள்ளது யார் என பாருங்கள். எங்களை மிகவும் ஸ்பெஷலாக உணர வைத்த ரஹ்மான் சாருக்கு நன்றி, #Aadujeevitham" என குறிப்பிட்டிருந்தார்.

இதனால், ஆடுஜீவிதம் படக்குழுவினருடன் அடுத்த சில நாட்கள் ரஹ்மான் அங்கே இருப்பார் என்பது உறுதியாகி உள்ளது. முன்னதாக, கொரோனா தொற்று காலத்தில், ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற படக்குழு, கொரோனா பொது முடக்கத்தின் போது, பல நாட்கள் அங்கேயே தங்கி இருக்க வேண்டிய சூழல் உருவாகி இருந்தது.

Prithviraj share photo with ar rahman from aadujeevitham set

இதன் பின்னர், தற்போது மீண்டும் படத்தின் வேலைகளை அவரகள் தொடங்கி உள்ளனர். இந்த திரைப்படம் 'ஆடுஜீவிதம்' என்ற பெயரில் பென்யாமின் எழுதிய நாவலை தழுவி உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | Bharathi Kannamma: சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த புது கேரக்டர்.. வெண்பாவுக்கு ஹீரோவா..?

தொடர்புடைய இணைப்புகள்

Prithviraj share photo with ar rahman from aadujeevitham set

People looking for online information on Aadujeevitham, AR Rahman, Prithviraj will find this news story useful.