கமல்ஹாசனை இசையமைப்பாளராக சொன்ன இளையராஜா.. சுவராஸ்ய சம்பவத்தை போட்டுடைத்த ஆண்டவர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது.

Kamal Haasan about Ilaiyaraaja Request on became music Director

Also Read | இது லிஸ்ட்லயே இல்லயே.. 'அகண்டா' பட இயக்குனரின் அடுத்த ஹீரோ இவரா? போட்டோவுடன் வெளியான அப்டேட்..

இதனை முன்னிட்டு விக்ரம் படம், CBFC  உறுப்பினர்கள் மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது.  விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Kamal Haasan about Ilaiyaraaja Request on became music Director

விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அனிருத் ரவிச்சந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியுள்ளன. 5 பாடல்கள் படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன.

Kamal Haasan about Ilaiyaraaja Request on became music Director

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெளியீட்டை ஒட்டி கமல்ஹாசன் ஸ்பாடிபை நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.  'இசையமைப்பாளராக வேண்டும் என்று தோன்றியுள்ளதா?' என்ற கேள்விக்கு "இளையராஜா ஒரு முறை இசையமைக்க கற்றுத் தருகிறேன். கற்றுக் கொள்ளுங்கள் என கேட்டார். உடனே என்னை அவமானப்படுத்த நினைச்சு இருந்தீங்களா? உங்களை என் அண்ணனா நினைச்சு இருந்தேன். இப்படி துரோகம் பண்றீங்களேனு சொன்னேன். இசையில் என்னை விட அதிகம் தெரிந்த இளைஞர்கள் இசையமைப்பாளராக வர முயன்று வருகின்றனர். அவங்க கிட்ட விட்றனும்" என கமல் பதில் அளித்துள்ளார்.

Kamal Haasan about Ilaiyaraaja Request on became music Director

Also Read | ராமேஸ்வரம் சென்ற லோகேஷ் கனகராஜ்.. 'விக்ரம்' படக்குழுவுடன் சாமி தரிசனம்! சூப்பர் ஃபோட்டோ

கமல்ஹாசனை இசையமைப்பாளராக சொன்ன இளையராஜா.. சுவராஸ்ய சம்பவத்தை போட்டுடைத்த ஆண்டவர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan about Ilaiyaraaja Request on became music Director

People looking for online information on Ilaiyaraaja, Kamal Haasan, Music Director, Vikram Movie will find this news story useful.