'சாஹோவின் கிளைமேக்ஸ்' - பின்னணி இசையமைக்கும் வீடியோவை வெளியிட்ட ஜிப்ரான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யுவி கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து பாகுபலி பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடிக்க, அருண் விஜய், நீல் நதின் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Ghibran tweets about Prabhas and Arun Vijay's Saaho

இந்த படத்துக்கு ஜிப்ரான் பின்னணி இசையமைக்கின்றார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், கிளைமேக்ஸ் - சாஹோ என்று குறிப்பிட்டு பின்னணி இசையமைப்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.