பிக்பாஸ் பிரபலத்துடன் யோகி பாபு இணைந்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

S3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த்.எம், வி. முத்துகுமார் தயாரித்து யோகிபாபு நடித்திருக்கும் படம் ஜாம்பி. இந்த படத்துக்கு இசை காட்டேரி பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Yogi Babu and Bigg Boss Yaashika Aaannand's zombie may release in September 6

இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அன்மையில் நடைபெற்றது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளப்படலாம் என எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பாகுபலி பிரபாஸின் சாஹோ ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.