பிரபாஸின் 'சாஹோ'வில் இருந்து வெளியான Bad Boy வீடியோ சாங் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 19, 2019 05:07 PM
பாகுபலியின் 2 பாகங்களுக்கும் கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் படம் சாஹோ. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடித்துள்ளார்.

யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து பேட் பாய் என்கிற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பிரபாஸுடன் நடனமாடியுள்ளார்.
இந்த பாடலை தமிழில் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். பாட்ஷா இசையமைத்துள்ள இந்த பாடலை பாட்ஷா, பென்னி தியோல், சுனிதா சாரதி ஆகியோர் பாடியுள்ளனர்.
பிரபாஸின் 'சாஹோ'வில் இருந்து வெளியான BAD BOY வீடியோ சாங் இதோ வீடியோ