legend updated recent
www.garudabazaar.com

ரஜினி சார் ஃபோன் பண்ணி.... - பாகுபலி நாயகன் பிரபாஸ் கலகலப்பு பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பாகுபலி1' மற்றும் 2 பாகங்களைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே உருவாகியுள்ள படம் ‘சாஹோ’. இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடித்துள்ளார்.

Baahubai Prabhas speaks about Saaho and Superstar Rajinikanth

மேலும் இந்த படத்தில் அருண் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நீல் நிதின் முகேஷ், லால், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அதில், நான் ரஜினி சாரோட பெரிய ஃபேன். ரஜினி சார் பாகுபலி பார்த்துட்டு பேசுனார். ரொம்ப நல்லாருக்குனு அவர் ஸ்டைலில் பேசுனாரு. அவர பார்த்தா நீங்க எப்படி தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் ஜப்பான் வரை ரசிகர்களை கவர்ந்தீங்க என்று கேட்பேன் என்றார்.

ரஜினி சார் ஃபோன் பண்ணி.... - பாகுபலி நாயகன் பிரபாஸ் கலகலப்பு பேட்டி வீடியோ