சூர்யாவின் காப்பான் வெளியாகும் தியேட்டரில் மாஃபியாவாக வரும் அருண் விஜய் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 16, 2019 08:23 PM
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படம் 'மாஃபியா'. இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தயாராகியுள்ளதாகவும், சூர்யாவின் காப்பான் படத்துடன் திரையரங்குகளில் மாஃபியா டீஸர் ஒளிபரப்பாகும் எனவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள சூர்யாவின் காப்பான் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.