’ஐஷ்வர்யா ராய், ஸ்ரீதேவிக்கு பிறகு இவர் தான்’ தென் இந்திய நடிகைகளுக்கு பெருமை சேர்த்த காஜல்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 17, 2019 04:37 PM
நடிகை காஜல் அகர்வால் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தில் அவர் பிசியாக உள்ளார். இதில் இவருடன் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.
இது தவிர கங்கனா ரனாவ்த் நடித்து ஹிந்தியில் வெளியான ’குயின்’ படத்தின் ரீமேக்கான ’பாரிஸ்’, வெங்கட் பிரபுவின் வெப் சீரிஸ் என்று பல்வேறு பிராஜக்ட்களில் பிசியாக உள்ளார் காஜல்.
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் சிங்கப்பூரில் இருந்து ஒரு சில புகைப்படங்களை பதிவேற்றி உள்ளார். சிங்கப்பூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற மேடம் துடாட்ஸ் (Madame Tussauds Museum) அருங்காட்சியகத்தில் தனது மெழுகு சிலையை வைக்க உள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அளவில் ஐஷ்வர்யா ராய், ஸ்ரீதேவி ஆகிய இரண்டு நடிகைகளுக்கு மட்டுமே இந்த பெருமை இதுவரை கிடைத்துள்ளது. இந்த வரிசையில் இடம்பிடிக்கும் முதல் தென் இந்திய நடிகை என்ற பெருமையை காஜல் பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி சிங்கப்பூரில் இந்த சிலை பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.