சித்தார்த்தின் 'டக்கர்' பட ஸ்டைலிஷான பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஷால்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 23, 2019 05:51 PM
நடிகர் சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியிருந்தது. இதனையடுத்து சித்தார்த் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'டக்கர்'.

இந்த படத்தை கப்பல் பட இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக 'மஜிலி' படத்தில் நடித்த திவ்யான்ஷா கௌசிக் நடித்துள்ளார். இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
Here it is, the Stylish First Look of @Actor_Siddharth 's #Takkar....Congrats & GB#TakkarFirstLook pic.twitter.com/HQBS13AXvT
— Vishal (@VishalKOfficial) December 23, 2019