'தளபதி 64' ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி பங்கேற்ற பிறந்தநாள் கொண்டாட்டம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 64' படத்தில் நடிகர் விஜய்யுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

Vijay Sethupathi Celebrates his fan Birthday in Vijay's Thalapathy 64 Shoot

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். அப்போது தனது ரசிகர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் , ஸ்ரீமன், கௌரி கிஷன், பிரேம், சஞ்சய் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Entertainment sub editor