’எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா’ ஹீரோவாகும் பிரேம்ஜி - இயக்குநர் யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 19, 2019 01:32 PM
சிம்புவின் ’வல்லவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனவர் பிரேம்ஜி. தொடர்ந்து சென்னை - 600028, சரோஜா, கோவா என்று பல்வேறு படங்களில் நடித்த இவர் தன் Catchy டயலாக் டெலிவரி மூலம் பிரபலம் அடைந்தார்.

சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் இறுதியாக நடித்த அவர் தோழா, ஜாம்பி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இந்நிலையில் பிரேம்ஜி முதல் முறையாக சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை ’ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்குகிறார். சமீர் பரத்ராம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் நாளை மதுரையில் தொடங்குகிறது.
Tags : Premji Amaran