தன் மகனின் முதல் கிறிஸ்துமஸ் - பிக்பாஸ் பிரபலம் நெகிழ்ச்சி பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகையான சுஜா வரூணி பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக கவனம் பெற்றார். அவர் நடிகரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனுமான சிவகுமாரை திருமணம் செய்தார்.

Suja Varunee shares her son's first Christmas Celebration

இத்தம்பதியினருக்கு கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஆண் குழந்த பிறந்தது. இருவரும் அந்த குழந்தையை சிம்பா என அழைக்கவிருப்பதாக தெரிவித்தனர். பின்பு தங்கள் குழந்தைக்கு அத்வைத் என்று பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் கிறிஸ்துமஸ் என்பதால் தங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை பிரபலங்கள் தங்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்தது வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நடிகை சுஜா வரூணி தனது ட்விட்டர் பக்கத்தில் தன் கணவர் சிவகுமார் மற்றும் மகன் அத்வைத்துடன் எடுத்துக்கொண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு கிடைத்த சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு. ராயல் பேபி அத்வைத் என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor