யஷ் நடித்துள்ள 'கேஜிஎஃப் சாப்டர் 2' மாஸான பர்ஸ்ட் லுக்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 21, 2019 07:33 PM
யஷ் நடித்த கன்னட திரைப்படமான 'கேஜிஎஃப் சாப்டர் 1' திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தமிழில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக விஷால் வெளியிட்டிருந்தார்.

இந்த படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரர் இசையமைத்திருந்தார். இதனையடுத்து இந்த படத்தின் அடுத்த பாகம் கேஜிஎஃப் சாப்டர் 2 என்ற பெயரில் வெளியாகிறது.
இந்நிலையில் கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் Rebuilding an Empire என்ற வாசகத்துடன் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Rebuilding An Empire!!!
Here We Go #KGFChapter2FirstLook 💥@hombalefilms @TheNameIsYash @prashanth_neel @duttsanjay @VKiragandur @SrinidhiShetty7 @bhuvangowda84 @BasrurRavi @Karthik1423 @AAFilmsIndia @excelmovies @FarOutAkhtar @ritesh_sid @VaaraahiCC pic.twitter.com/DIemJHf7l0
— Hombale Films (@hombalefilms) December 21, 2019