2003 உலகக்கோப்பை பைனலில் தோற்றதற்கு நாம் திருப்பி கொடுத்தது போல உள்ளது- பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது.

Shanthanu Bhagyaraj Tweet About Yesterday World Cup Match Indian vs Australia

மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த போட்டிகளில் ஒன்றான இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடந்தது. அனலிஸ்டுகள் சொன்னது போல ரன் வேட்டையே நடந்தது. தொடக்கத்திலேயே இருந்து அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 352 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஷிகர் தவான் 117 ரன்கள் இந்திய அணியின் வெற்றி பாதைக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார்.

சேஸிங்கில் ஆஸ்திரேலியா சுமாராகவே ஆரம்பித்தது. நம் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியையை கொடுத்துக்கொண்டே இருந்தனர். 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போட்டியை வென்றது.

இந்நிலையில் சாந்தனு 2003 உலகக்கோப்பை பைனலில் தோற்றதற்கு நாம் திருப்பி கொடுத்தது போல உள்ளது. இன்று இந்தியா தான் சிறந்த டீம். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீலடிங் என அசத்தினோம். நாங்கள் சூப்பர் பாசிட்டிவ் மனநிலையில் உள்ளோம், என பதிவிட்டு இருந்தார்.