Breaking: சந்தானம் படத்தை வாங்கிய சன் டிவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தில்லுக்குதுட்டு 2’ திரைப்படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள A1 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல டிவி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Santhanam starring A1 Satellite and Digital Rights acquired by Sun TV for 4.60Crores

ஹாரர் காமெடி திரைப்படமான தில்லுக்குதுட்டு திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள தாரா அலிஷா நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்கிறார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் கடந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி ரசிர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை சன் டிவி நிறுவனம் சுமார் ரூ.4.60 கோடிக்கு கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சந்தானத்தின் வழக்கமான காமெடி டைமிங் வசனங்கள் கொண்ட இப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இது தவிர சந்தானத்தின் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.