இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் போட்டியில் அசத்தலான வெற்றியை பெற்ற நிலையில் அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் கனவாக உள்ளது

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பாடலை கம்போஸ் செய்து பதிவு செய்துள்ளார். கிரிக்கெட் ஆன்ந்தம் என்ற பெயரை உடைய இந்த பாடலை அவரே கம்போஸ் செய்தது மட்டுமின்றி பாடியும் உள்ளார்.
Here is the cricket anthem in honour of #TeamIndia ! #CWC19 is now fully underway with our #BoysinBlue doing what they do best!! I released #CricketOdaCrown on @StarSportsTamil in honour of the World Cup.! Lyrics by @gkblyrics @StarSportsIndia @imVkohli @msdhoni
Share and spread pic.twitter.com/vmChZZNiBb
— G.V.Prakash Kumar (@gvprakash) June 6, 2019
பாடல் வரிகள் இதோ :
மாஸுக்கே மாஸுடா, ஆப்பனொண்ட் தூசுடா
கெத்தை நீயும் காட்டிடு இந்தியா
வலிகளை மறந்திடு எழுந்திடு
தடைகளை தகர்த்திடு உயர்ந்திடு
சிக்ஸரு பறக்கட்டும் விசிலுதான் கிழியட்டும்
கெத்த நாம காட்டுவோம், கிரிக்கெட்டோட கிரெளனுடா
பிபி தான் எகிறட்டும், பல்ஸ் ரேட்டு கூடட்டும்
டானுக்கெல்லாம் டானுடா இந்தியா
வாடா வாடா ஆட்டம் நம்ம கையில
தொட்டா தூக்கிடும் வித்தை நம்ம பையில
வம்பா வந்துட்டா தெறிக்க விடு சிக்ஸூல
தெம்பா இறங்குடா கிரெளடு நம்ம கையில
சிக்ஸரு பறக்கட்டும் விசிலுதான் கிழியட்டும்
கெத்த நாம காட்டுவோம், கிரிக்கெட்டோட கிரெளனுடா
பிபி தான் எகிறட்டும், பல்ஸ் ரேட்டு கூடட்டும்
டானுக்கெல்லாம் டானுடா இந்தியா.