www.garudabazaar.com
iTechUS

இறுதிக்கட்டத்தை எட்டிய பிக்பாஸ்.. Finalist 3 பேரும் வச்ச கோரிக்கை.. இன்றைய பிக்பாஸில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார் அமுதவாணன். இதனால் சக போட்டியாளர்கள் அனைவரும் சோகமடைந்துள்ளனர்.

Finalists asking People to vote for them in BiggBoss 6

முன்னதாக, Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதனால் போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

Finalists asking People to vote for them in BiggBoss 6

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதிலும் பண மூட்டையை போலவே நேரம் ஆக, ஆக பணத்தொகையும் அதிகரிக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, மிட் வீக் எவிக்ஷனில் மைனா வெளியேறியுள்ளார். இந்நிலையில் finale-விற்கு அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோரிடையே போட்டி நடைபெறுகிறது.

Finalists asking People to vote for them in BiggBoss 6

இந்நிலையில், புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவரும் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி சொல்வதுடன், தங்களுக்கு வாக்கு அளிக்கும்படி கோரிக்கை வைத்திருக்கின்றனர். முதலில் பேசும் அசீம்,"என்னை உங்க வீட்டு பிள்ளைன்னு நினைச்சீங்கன்னா எனக்கு வாக்களித்து இந்த பிக்பாஸ் சீசன் 6-ன் டைட்டில் வின்னரா என்னை ஆக்குங்கன்னு பணிவன்புடன் கேட்டுக்குறேன்" என்கிறார்.

Finalists asking People to vote for them in BiggBoss 6

இதனையடுத்து பேசும் விக்ரமன்,"106 நாட்கள் இந்த வீட்டுல வாழ்ந்துகாட்டிட்டு தைரியமா உங்க முன்னாடி வந்து நான் கேட்கக்கூடிய வாக்குகள். உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு ஆதரவு கொடுக்கணும்" என்கிறார். பின்னர் பேசும் ஷிவின்,"நீங்க கொடுத்த ஆதரவுல நான் இங்க நின்னுட்டு இருக்கேன். உண்மையும் எதார்த்தமும் ஜெயிக்கும்ங்குற நம்பிக்கையில உங்க எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்" என்கிறார். இதனால் இன்றைய எபிசோட் குறித்த ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Finalists asking People to vote for them in BiggBoss 6

People looking for online information on Azeem, Biggboss6Tamil, Shivin, Vikraman will find this news story useful.