www.garudabazaar.com
iTechUS

ரஞ்சிதமே பாட்டுக்கு டான்ஸ் ஆடிய கல்லூரி மாணவிகள்.. வீடியோவை பகிர்ந்து ராஷ்மிகா கமெண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு கல்லூரி மாணவிகள் நடனம் ஆடும் வீடியோ காட்சிகளை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.

Rashmika shared college students dancing Ranjithame video

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த (11.01.2023) அன்று வெளியாகி உள்ளது.  இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Rashmika shared college students dancing Ranjithame video

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியானது.

வாரிசு படத்தின்  "ரஞ்சிதமே" பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில் சென்னை MGR  கல்லூரி பிஸியோதெரபி மாணவர்கள் பொங்கல் விழாவில் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவுக்கு "பெண்களே கொன்னுட்டீங்க போங்க" என தலைப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika shared college students dancing Ranjithame video

People looking for online information on Ranjithame, Rashmika Mandana, Varisu will find this news story useful.