"என் குழந்தைங்க, பசியால சாவதை விட"- தொழிலாளர்கள் வேதனை... சூர்யா குடும்பம் கொடுத்த பெரிய தொகை..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயினால் நடுங்கி வருகிறது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். தினம் தினம் இறப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் இந்தியா முழுக்க சினிமா துறையும் முடங்கியுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன.

படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழல் வளர்ந்த நடிகர்களுக்கு வேண்டுமானால் இளைப்பாறுதலாக இருக்கலாம், ஆனால் சினிமாவில் தினசரி கூலிகளாக வேலை செய்பவர்களுக்கு மிகவும் கடினமானதொன்று. பலரும் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கவலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக சினிமா துறையின் கூட்டமைப்பான FEFSI-யின் தலைவர் RK.செல்வமணி கூறும்போது," லைட்மேன் சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது, எனது பிள்ளைகள் பசியால் சாவதை விட, நான் வைரஸால் சாவது மேல் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சினிமா துறையை சார்ந்த மிக பெரிய நடிகர்கள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி மூவரும் சேர்ந்து குடும்பமாக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.