பிரபல நடிகையின் தந்தை கொரோனாவால் மரணம் - ''கடைசில எங்க அப்பாவ கொரோனா எடுத்துக்கொண்டது''
முகப்பு > சினிமா செய்திகள்இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக மாவட்டங்கள் அனைத்துக்கும் 144 உத்தரவு நாளை (மார்ச் 23) மாலை 6 மணி முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

அவசியம் இல்லாமல் வெளியே செல்லவேண்டாம், கைகளை சோப் போட்டு நன்றாக கழுவ வேண்டும் என்ற வழிமுறைகள் கடைபிடிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தமிழகத்தில் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகை ஷோபியா மைல்ஸ் தனது தந்தை மரணமடைந்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், எனது தந்தை சில மணி நேரங்களுக்கு முன் மரணமடைந்தார். இறுதியாக கொரோனா வைரஸ் எனது தந்தையை எடுத்துக்கொண்டது. சோஃபியா மைல்ஸ் Doctor Who என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
RIP Peter Myles. ❤️
My dear Dad died only a few hours ago. It was the Corona Virus that finally took him.
— Sophia Myles (@SophiaMyles) March 21, 2020