பிக்பாஸ் நடிகைக்கு கொலை மிரட்டல்... நடிகரின் ரவுடி ரசிகை துணிச்சல்... போலீசில் நடிகை புகார்...!
முகப்பு > சினிமா செய்திகள்ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பதிமூன்றாம் சீசனில் கலந்து கொண்டவர் நடிகை தேவலோனா பட்டாச்சாரியா. இவர் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகையாவார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறினார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர் தனது முதுகு பிரச்சனையிலிருந்து வெளிவர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை தேவலோனா ஒரு பதிவு மூலம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறார். அதில் நடிகர் அர்ஹான் கானின் ரசிகர்கள் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் மும்பை போலீஸ் மற்றும் மகாராஷ்டிரா சைபர் பிரிவினை 'டேக்' செய்து அவர் "இந்த செய்தியை பாருங்கள். எனக்கு இந்த மாதிரி கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருகிறது. இதை ஒரு பெண் அனுப்புகிறார். சீக்கிரம் விரைந்து இதில் நடவடிக்கை எடுத்து உதவுங்கள்" என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அந்த பதிவில் ஷபீபா என்ற ஒரு பெண் "அர்ஹான் கானை அவமதிப்பு செய்தால், அது தான் உன்னுடைய கடைசி நாள்" என்று மிரட்டலாக கூறியுள்ளார். மேலும் இது போன்ற மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களான ராஷ்மி தேசாய், சித்தார்த் சுக்லா ஆகியோருக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
To @MumbaiPolice @MahaCyber1 please look into this message where i am getting killing threats from this lady.Urge you to take action against it asap. pic.twitter.com/EFYCIks5FJ
— Devoleena Bhattacharjee (@Devoleena_23) April 21, 2020
To @MumbaiPolice @MahaCyber1 please look into this message where i am getting killing threats from this lady.Urge you to take action against it asap. pic.twitter.com/EFYCIks5FJ
— Devoleena Bhattacharjee (@Devoleena_23) April 21, 2020