தல அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் குறிப்பிட்ட ஒரு கேரக்டரை தவிர எந்த கேரக்டரிலும் நடிக்க தயார் என பிரபல பிக் பாஸ் நடிகை யாஷிகா தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் படித்தார்.
அதன் பிறகு, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்டு மக்களின் கவனம் ஈர்த்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகை யாஷிகாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் குவிய, தற்போது பிசியாக நடித்து வருகிறார். யோகிபாபுவுடன் ‘ஜாம்பி’ படத்திலும், மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான நடிகர் மகத்துடன் ஒரு திரைப்படத்திலும், பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் நாயகனாக நடிக்கும் ‘ராஜபீமா’ திரைப்படத்திலும் கேமியோ ரோலில் நடிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது ரசிகர்களிடம் ட்விட்டரில் சிறிய உரையாடிய யாஷிகா, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர், தல அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன ரோலில் நடிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய யாஷிகா, ‘முதலில் தல அஜித் படத்தில் நடிக்க என்னை அணுக வேண்டும். எது எப்படியானாலும் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் தங்கை கேரக்டரை தவிர எந்த கேரக்டரிலும் நடிக்க தயார் என கூறியுள்ளார்.
Come join my first live on Twitter ❤️ rapid fire questions are gonna get answered by me ! So come join :) https://t.co/9KXVpejR3Y
— Yashika Aannand (@iamyashikaanand) May 26, 2019