www.garudavega.com

''மீண்டும் அதே டீமுடன் அதே இடத்தில்...'' 'சொல்வதெல்லாம் உண்மை' குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆரோகணம்', 'அம்மனி' ஆகிய படங்களுக்கு பிறகு நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம் 'ஹவுஸ் ஓனர்'. இந்த படத்தில் கிஷோர் மற்றும் லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Lakshmy Ramakrishnan tweets about her film House Owner and Solvathellam Unmai

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவுபெற்று தற்போது டீஸர் வெளியானது. இந்த படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார்.

அதில், ''சொல்வதெல்லாம் உண்மை முடிந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதே தளத்தில் அதே டீமுடன் நேர் காணல் ஒன்றில் இருக்கிறேன். என்படத்தின் ஷூட்டிங் மற்றும் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளது.  உங்களின் நல்வாழ்த்துகளால் தான் இது நிகழ்ந்துள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ''இந்த செட்டில் நான் மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். இது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல.. இது உணர்வுப்பூர்வமான பயணம்'' என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.