'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித். பின்னர் 'அமராவதி' படத்தின் மூலம் தமிழ்சினிமாவிற்கு வந்த அவர், 'வாலி', 'அமர்களம்', 'கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்', 'முகவரி' என வெரைட்டியானா ரோல்களில் நடித்து தமிழக ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் நிலைக்கு உயர்ந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல பாடகர் எஸ்.பி.பி நடுவராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அஜித் பாடல் ஒன்றை சிறுவன் ஒருவன் பாடினான். அவன் பாடி முடித்ததும் இந்த பாடலில் தல என்று சொன்னாயே, தல என்றால் யார் தெரியுமா ? என்று கேட்டார்.
அதற்கு அச்சிறுவன் அஜித் என்றான், பின்னர் பேசிய எஸ்.பி.பி, எனது மகன் சரணும் அஜித்தும் கிளாஸ் மேட்ஸ். இவங்க ரெண்டு பேரும் மெட்ரிகுலேஷன் தேர்வு ஆந்திராவுல தான் போய் எழுதுவாங்க. முதன் முதலில் விளம்பர படங்களில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் போது, சரணுடைய உடை மற்றும் ஷூ அணிந்து செல்வார். அது அவருக்கு செண்டிமென்ட்.
அஜித் முதன் முதலில் ஹீரோவாக நடிச்சது தெலுங்கு படம். அவர அந்த தயாரிப்பாளருக்கு அறிமுகப்படுத்துனது நான் தான். எனக்கு அவர் கிட்ட பிடிச்சது என்ன தெரியுமா? தேவையில்லாம எந்த நியூஸ் பேப்பருக்கும் பேட்டி கொடுக்க மாட்டாரு. டிவியில் தேவையில்லாம பேச மாட்டாரு. சமூக வலைதளங்களில் எதாவது கமெண்ட் பண்ணி டென்சன் படுறதோ கிடையாது' என்றார்.