ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. 100 நாள் ஆட்டம் விரைவில்...: பிக் பாஸ் 3 புரொமோ ரிலீஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 3வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

Bigg Boss Tamil Season 3 promo has been released

கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. இரு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இவிபி ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில், இந்நிகழ்ச்சியின் புரொமோக்கான ஷூட்டிங் நடைபெற்றதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், பிக் பாஸ் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் புரொமோ வீடியோவை பிக் பாஸ் டீம் வெளியிட்டுள்ளது.

இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் வசிக்கப்போகும் போட்டியாளர்கள் யார்?, நிகழ்ச்சி எப்போது முதல் டிவியில் ஒளிபரப்பாகும் என்பன போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. 100 நாள் ஆட்டம் விரைவில்...: பிக் பாஸ் 3 புரொமோ ரிலீஸ் வீடியோ