நடிகா்கள் விஜய் சேதுபதியின் சிந்துபாத், தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களை வெளியிட ஹைதராபாத் உயா்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகா்கள் விஜய் சேதுபதியின் சிந்துபாத், தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களை தமிழில் வெளியிட கே புரொடக்ஷன் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் பாகுபலி திரைப்படத்தை தமிழில் வெளியிட்ட நிறுவனமாகும்.
அப்படி வெளியிட்ட வகையில் பாகுபலி தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.17.60 கோடி பாக்கி வைத்துள்ளது. இதையடுத்து பாகுபலி திரைப்பட தயாரிப்பு நிறுவனமானது ஹைதராபாத் உயா்நீதிமன்றத்தில், கே புரொடக்ஷன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடா்ந்தது.
இந்த வழக்கில் தங்களுக்கு வரவேண்டிய தொகையை திருப்பித் தராமல், கே புரொடக்ஷன்ஸ் எந்த படத்தையும் வெளியிடக் கூடாது என்று தடை விதிக்க கோாியது. மேலும் படத்திற்கான தொலைக்காட்சி உரிமம் உட்பட அனைத்து உரிமங்களையும் விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று தொிவிக்கப்பட்டது.
அதன்படி பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் கோாிக்கையை ஏற்று விஜய் சேதுபதியின் சிந்துபாத், எனைநோக்கி பாயும் தோட்டா படங்களை வெளியிட ஹைதராபாத் உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.