தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் , இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தற்போது தனுஷ் நடிப்பில் 'தி எக்ஸ்டிரார்டினர் ஜர்னி ஆப் ஃபகிர்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் 'பக்கிரி' என்கிற பெயரில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தில் இருந்து இங்கிலீசு லவ்ஸூ என்கிற பாடல் வெளியாகியுள்ளது. அமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். தனுஷ் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.
'இங்கிலீசு லவ்சு' - தனுஷ் படத்தில் இருந்து வெளியான பாடல் இதோ வீடியோ