ஜப்பான் நாட்டின் விருது பெற்ற தமிழ் படம் - தமிழக முதல்வர் வாழ்த்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 05, 2019 07:01 PM
'ஆசை', 'நேருக்கு நேர்', 'ரிதம்', 'சத்தம் போடாதே' போன்ற படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் இயக்குநர் வஸந்த். அவர் தற்போது 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்கிற படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படம் பிரபல எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஜெயமோகன், ஆதவன் உள்ளிட்ட படைப்பாளிகளின் சிறுகதைகளைக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் பார்வதி, லட்சுமி பிரியா சந்திரமௌலி, கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு என்.கே.ஏகாம்பரம் , ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படம் உலக அளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களையும் விருதுகளையும வென்று வருகிறது.
குறிப்பாக ஜப்பான் நாட்டின் Fukkuoka Audience Award என்ற விருதை இந்த படம் வென்றுள்ளது. இதற்காக இயக்குநர் வசந்த் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று இயக்குநர் திரு.வஸந்த் அவர்கள் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும்" திரைப்படம் உலக திரைப்பட விழாவில் பாராட்டை பெற்றதோடு ஜப்பான் நாட்டின் Fukuoka Audience Award விருது பெற்றதற்காக நேரில்சந்தித்து வாழ்த்து பெற்றார். pic.twitter.com/aDVoKiSJqN
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 5, 2019