அமெரிக்காவில் பெஸ்ட் ஃபிலிம் விருது வாங்கிய இந்த தமிழ் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆசை, நேருக்கு நேர் , ரிதம், சத்தம் போடாதே உள்ளிட்ட இதமான படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியவர் வஸந்த். அவர் தற்போது 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

Vasanth's Sivaranajaniyum Sila Pengalum Movie Got Best Film Awad in Atlanta Film Festival

பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் பார்வதி, லட்சுமி பிரிா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீநிவாசன், கருணாகரன், மயக்கம் என்ன சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்பட விழா, பூனே சர்வதேச திரைப்பட விழா சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

மேலும் சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு மேலும் கௌரவமாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச திபுரான் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவிலும் அதனைத் தொடர்ந்து அட்லாண்ட் மாகாணத்தின் திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குநர் வஸந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரையிட்டு சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது.