''பிக்பாஸ்ல சாண்டி பத்தி தெரிஞ்சது'' - ஜிவி பிரகாஷ் பட இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டு வந்த மீரா ஒரு வழியாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை வெளியேறினார். அதற்கு அவர் சேரன் மீது பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Vasantha Balan Speaks about Sandy and Kamal Haasan's Bigg Boss

இந்நிலையில் இயக்குநர் வசந்த பாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் சாண்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ஜெயில் திரைப்படத்தில் ஒரு நடனக்காட்சி இருந்தது. ஜீவி நடன இயக்குநராக யாரை போடப்போகிறீர்கள் என்று கேட்டார். பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன்.

சர்வம் தாள மையம் திரைப்படத்தில் சாண்டி திறமையாக நடனக்காட்சிகள் அமைத்தார் என்று பரிந்துரை செய்தார். இசையமைப்பாளரைத் தாண்டி இப்ப ஹீரோ வேற.., அவர் சொல் தட்ட முடியுமா. 

உடனே சாண்டியிடம் பேசுங்கள் என்று என் தயாரிப்பு மேலாளரிடம் கூறினேன். நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச்சொன்னேன். சாண்டி எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார். படப்பிடிப்புக்கு முன் இரண்டு முறை சந்தித்தேன்.

நடனக்காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார்.

படப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார். நான் தான் அதிகம் கத்திக்கொண்டு இருந்தேன்.

இந்த நாட்களில் எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது.வாழ்த்துகள் சாண்டி. வென்று வாருங்கள். ஜெயில் காத்திருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.