தலைவர் Counting Starts..! - சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ மோஷன் போஸ்டர் ரிலீஸ் விவரம் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 05, 2019 05:27 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.
மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ.35 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தர்பார்’ மோஷன் போஸ்டர் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வரும் நவம்பர்.7ம் தேதி ரிலீசாகும் என தெரிவித்திருந்தார்.
தற்போது ‘தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வரும் நவ.7ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என்றும், இதனை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.