Nenjuku Needhi

துல்கர் சல்மான் - ராஷ்மிகா - மிருணாள் நடிக்கும் புதிய ரொமாண்டிக் படம்.. ரிலீஸ் எப்போ? OFFICIAL UPDATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிக்கும் சீதா ராமம் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

Dulquer Salmaan Rashmika Mandanna Sita Ramam is Releasing Worldwide In Theatres On 5th August

Also Read | புதிய கலர் ஃபுல் போஸ்டருடன் வெளியான RJ பாலாஜியின் "வீட்ல விசேஷம்" பட அப்டேட்! செம்ம டிரெண்டிங்

இயக்குனர் ஹனு ராகவபுடி போர் பின்னணியில் ஒரு கண்கவர் காதல் கதையை உருவாக்கி வருகிறார். சீதா ராமம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் ராமனாகவும் சீதையாகவும் நடிக்கின்றனர். ஸ்வப்னா சினிமாவின் கீழ் அஸ்வினி தத் மற்றும் பிரியங்கா தத் தயாரித்துள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் வழங்குகிறார்கள்.

சில நாட்களுக்கு முன் வெளியாகியுள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் ரசிகர்களை  கவர்ந்தது. விஷால் சந்திரசேகர் இசையமைத்த இப்பாடல் ஹிட் ஆகியுள்ளது. 

Dulquer Salmaan Rashmika Mandanna Sita Ramam is Releasing Worldwide In Theatres On 5th August

முன்னோட்ட காட்சியில் துல்கர் மற்றும் மிருணாள் இடையேயான காதல் கெமிஸ்ட்ரி இப்படத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அஃப்ரீனாக மிகவும் சிறப்பான மற்றும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்துக்கு பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

Dulquer Salmaan Rashmika Mandanna Sita Ramam is Releasing Worldwide In Theatres On 5th August

இப்படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உடன் சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டராகவும், சுனில் பாபு PD யாகவும், கலை இயக்குனராக வைஷ்ணவி ரெட்டி, அலி தாட்ஸ் பணியாற்ற, ஆடை வடிவமைப்பாளராக ஷீத்தல் ஷர்மா பணியாற்றியுள்ளனர்.

இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவித்துள்ளது.

Dulquer Salmaan Rashmika Mandanna Sita Ramam is Releasing Worldwide In Theatres On 5th August

இந்த படம் 60களின் பின்னணியில் உருவாகி உள்ளது. திரைப்படத்தின் முதல் தோற்றத்தில், 1960 களில் உள்ள காட்சியமைப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. முக்கியமாக போஸ்டர்களில் படத்தின் தனித்துவம் புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. போரூற்றி வளர்த்த காதல் கதை எனும் அடைமொழியுடன் படத்தின் அனைத்து போஸ்டர்களும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

Also Read | பாண்டிச்சேரி கடற்கரையில் ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன்.. #SK20 படத்தின் வேறலெவல் அப்டேட்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer Salmaan Rashmika Mandanna Sita Ramam is Releasing Worldwide In Theatres On 5th August

People looking for online information on Dulquer salmaan, Rashmika Mandanna, Sita Ramam will find this news story useful.