IRAVIN NIZHAL
www.garudabazaar.com

புது படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் பிரபல இயக்குனர்.. BTS போட்டோவுடன் வெளிவந்த தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சீதா ராமம் படத்தின் புதிய போஸ்டர் & BTS போட்டோ வெளியாகி உள்ளது.

Sita Ramam Movie Rashmika Mandanna BTS Image goes Viral

Also Read | கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார்.. பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான கலர்ஃபுல் போஸ்டர்!!

இயக்குனர் ஹனு ராகவபுடி 1965 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போர் பின்னணியில் இந்த படத்தினை உருவாக்கி வருகிறார்.

சீதா ராமம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் ராமனாகவும் சீதையாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அஃப்ரீனாக மிகவும் சிறப்பான மற்றும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பாலாஜி எனும் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் தருண் பாஸ்கர் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பெல்லி சூப்புலு படத்தை இயக்கி தேசிய விருது வென்றவர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா உடன் இயக்குனர் தருண் பாஸ்கர் இருக்கும் BTS புகைப்படமும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

Sita Ramam Movie Rashmika Mandanna BTS Image goes Viral

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்துக்கு பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் வெளியாகியுள்ள இந்த படத்தின்  சிங்கிள் பாடல்கள் ரசிகர்களை  கவர்ந்துள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்த இப்பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. 

Sita Ramam Movie Rashmika Mandanna BTS Image goes Viral

இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூன் 25 ஆம் தேதி ரிலீசாகி உள்ளது.

இப்படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உடன் சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டராகவும், சுனில் பாபு PD யாகவும், கலை இயக்குனராக வைஷ்ணவி ரெட்டி, அலி தாட்ஸ் பணியாற்ற, ஆடை வடிவமைப்பாளராக ஷீத்தல் ஷர்மா பணியாற்றியுள்ளனர்.

Sita Ramam Movie Rashmika Mandanna BTS Image goes Viral

ஸ்வப்னா சினிமாவின் கீழ் அஸ்வினி தத் மற்றும் பிரியங்கா தத் தயாரித்துள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் வழங்குகிறார்கள்.

Also Read | அடடே..பா. ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது.. ஆடியோ உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Sita Ramam Movie Rashmika Mandanna BTS Image goes Viral

People looking for online information on Dulquer salmaan, Hanu Ragavapudi, Rashmika Mandanna, Sita Ramam Movie will find this news story useful.