The Legend
Maha others
www.garudabazaar.com

AK61 படத்தின் சென்னை ஷூட்? செம லுக்கில் மஞ்சு வாரியர்! கூட இந்த நடிகை வேற இருக்காங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தின் நடிகை மஞ்சு வாரியர் படப்பிடிப்பு  தளத்தில் பங்குபெற்றதாக சொல்லப்படும் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Manju Warrier with actress Pooja at AK 61 Movie Shooting Spot

Also Read | மம்மூட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் "நண்பகல் நேரத்து மயக்கம்".. வித்தியாசமான அசத்தல் POSTER!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

Manju Warrier with actress Pooja at AK 61 Movie Shooting Spot

AK61 படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது.

இந்த சென்னை படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது.  முக்கிய சாலைகளில் பரபரப்பான பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

Manju Warrier with actress Pooja at AK 61 Movie Shooting Spot

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியருடன் நடிகை பூஜா இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நடிகை பூஜாவின் குழந்தைதான் "என்னை அறிந்தால்" படத்தில் ஒரு வயது குழந்தை ஈஷாவாக நடித்தார்.

Manju Warrier with actress Pooja at AK 61 Movie Shooting Spot

இந்த படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன.  நடிகர் அஜித் ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.

Also Read | Cook with Comali 3 : "வேற மாதிரி, வேற மாதிரி.." டைட்டிலை கொத்தாக தூக்கிய குக் யாரு?" கொண்டாடும் ரசிகர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier with actress Pooja at AK 61 Movie Shooting Spot

People looking for online information on Ajith Kumar, AK 61 Movie Shooting Spot, AK61, Manju Warrier, Pooja will find this news story useful.