Maha others
www.garudabazaar.com

மம்மூட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் "நண்பகல் நேரத்து மயக்கம்".. வித்தியாசமான அசத்தல் POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எர்ணாகுளம்: மம்முட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் "நண்பகல் நேரத்து மயக்கம்" படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

Mammooty Nanbagal Nerathu Mayakkam Movie New Poster Released

Also Read | Cook with Comali 3 : "வேற மாதிரி, வேற மாதிரி.." டைட்டிலை கொத்தாக தூக்கிய குக் யாரு?" கொண்டாடும் ரசிகர்கள்

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.

Mammooty Nanbagal Nerathu Mayakkam Movie New Poster Released

லிஜோ ஜோஸ் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற இந்த புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி அடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Mammooty Nanbagal Nerathu Mayakkam Movie New Poster Released

ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டவர். மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

சிலநாட்களுக்கு முன் இந்த படத்தின் இரண்டாவது டீசர் வீடியோ வெளியானது. ஏற்கனவே இப்படத்தின் முதல் டீசர் சிலமாதங்களுக்கு முன் ரிலீசானது. முதல் டீசரில் படத்தில் நடித்துள்ள பிரதான கதாபாத்திரங்கள் இல்லாமலே டீசர் அமைந்தது.

இரண்டாவது டீசரில்  ஒரே ஷாட்டில் மம்முட்டி நடித்த ஒன்றரை நிமிட காட்சி டீசராக வெளியானது.

Mammooty Nanbagal Nerathu Mayakkam Movie New Poster Released

அந்த டீசரில் மம்மூட்டி, 1973 ஆம் ஆண்டு தமிழில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கௌரவம்' படத்தின் (பாரிஸ்டர் ரஜினிகாந்த் & அட்வகேட் கண்ணன் வாக்குவாதம் செய்யும்) காட்சியை மதுபான விடுதி பின்னணியில் சிங்கிள் ஷாட்டில் பேசி நடித்திருந்தார்.  இந்த காட்சிக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் எல் வண்டியில் கிராமத்து சாலையில் செல்ல பின்னால் சில நபர்கள் துரத்துவது போல போஸ்டர் அமைந்துள்ளது. மம்முட்டி முகத்தில் ஒருவித மலர்ச்சியுடன் போஸ்டரில் தோன்றியுள்ளார்.

Also Read | ஜெரின் கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் நேரடி தமிழ்ப்படம்.!

Mammooty Nanbagal Nerathu Mayakkam Movie New Poster Released

People looking for online information on Mammooty, Nanbagal Nerathu Mayakkam Movie, Nanbagal Nerathu Mayakkam Movie New Poster will find this news story useful.