Maha
www.garudabazaar.com

போட்டோஷூட்டில் டான்ஸ் ஆடிய ராஷ்மிகா மந்தனா.. 2 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna Photoshoot BTS Video Crossed 2 Million Views

Also Read | சந்திரமுகி-2 படத்துல ஹீரோயின் இவங்களா? ஆஹா அப்போ வேறலெவல் சம்பவம் கன்பார்ம்!

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில்  "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.

2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்தாண்டு அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Rashmika Mandanna Photoshoot BTS Video Crossed 2 Million Views

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில்  3.2 கோடி ரசிகர்கள் பின் தொடரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. மேலும் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

Rashmika Mandanna Photoshoot BTS Video Crossed 2 Million Views

இந்நிலையில் சிவப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா போட்டோ ஷூட் நடத்தி கடந்த ஞாயிறு அன்று போட்டோக்களை வெளியிட்டார். இந்த போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் மட்டும் 2 மில்லியன் லைக்குகளை பெற்றது. இந்த போட்டோக்களை போட்டோகிராபர் மோகித் வரு எடுத்திருந்தார். உடைகளை கவுர்வி தேசாய் வடிவமைத்தார். தற்போது கவுர்வி தேசாய் வெளியிட்டுள்ள ராஷ்மிகா நடனமாடும் வீடியோ வெளியாகி 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

 

Also Read | அஜித் நடிக்கும் AK 61.. பட ஷூட்டிங் சென்னைல இந்த ஏரியால தான் நடக்குதாம்! வேறமாரி அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna Photoshoot BTS Video Crossed 2 Million Views

People looking for online information on Rashmika Mandanna, Rashmika Mandanna Photoshoot will find this news story useful.