மும்பையில் குவிந்த கோலிவுட்டின் முன்னணி ஸ்டார்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துவரும் படம் 'தர்பார்'. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

Prabhu Deva, Salman Khan's Dabang 3, Rajinikanth , AR Murugadoss's Darbar Raghva Lawrence Akshay Kumar's Lakshmi these all movies Shooting in Mumbai

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பையில் நடைபெற்றுவருகிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் கலந்து கொண்ட தகவல்கள் அண்மையில் வெளியாகின.

மேலும் சல்மான் கானை வைத்து பிரபு தேவா 'தபாங் 3' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் மும்பையில் தான் நடைபெறுகிறது.  அதனைத் தொடர்ந்து காஞ்சனா படத்தின் ரீமேக்கான லக்ஷ்மி படத்தின் படப்பிடிப்பும் மும்பையில் நடைபெறுகிறது.

இந்த படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க ராகவா லாரன்ஸ் இந்த படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.