தளபதி விஜய்யின் பிரபல பாடல் ஒன்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோ நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2019 தொடரில் நேற்று(மே1) நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் போட்டியை ஆடி முடித்தது. இந்நிலையில், சிஎஸ்கே அணியினர் பங்கேற்ற புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், அணியின் ஆல்-ரவுண்டராக திகழும் பிராவோ நடிகர் விஜய் நடித்த பிரபல பாடல் ஒன்றுக்கு நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘வில்லு’ படத்தில் வரும் சூப்பர்ஹிட் பாடலான ‘வாடா மாப்பிள்ளை வாழைப்பழ தோப்புல’ பாடலுக்கு நடனமாடினார் டிஜே பிராவோ. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
DJ Bravo shakes his leg for a Thalapathy number!#NipponPaint #ShadesThatRoar #CSK @NipponIndia @ChennaiIPL @DJBravo47 pic.twitter.com/7SSmRoAYjX
— Nippon Paint India (@NipponIndia) May 2, 2019