‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் சந்தோஷ்.பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தில் அரவிந்த்சாமி நடிக்கவிருக்கிறார்.

டிடெக்டிவ் த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்கிறார். பள்ளு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
எட்செட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி-த்ரிஷா இணைந்து நடிக்கும் ‘சதுரங்க வேட்டை 2’,ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி-ரெஜினா இணைந்து நடிக்கும் ‘கள்ளப்பார்ட்’ ஆகிய திரைப்படங்கள் அரவிந்த்சாமி கைவசம் உள்ளன.