'தளபதியை வைத்து நான் இயக்கும் படம்..?' - இயக்குநர் ராஜேஷ் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சிவா மனசுல சக்தி' , 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற கலகலப்பான வெற்றி படங்களை இயக்கியவர் ராஜேஷ் . இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து 'மிஸ்டர்.லோக்கல்' என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

RajeshM talks about Sivakarthikeyan and Nayanthara's Mr.Local and Thalapathy Vijay

ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராதிகா, ரோபோ ஷங்கர், சதீஷ், யோகி பாபு போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் இயக்குநர் ராஜேஷ்.எம் Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக வெளியான செய்தி குறித்து தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராஜேஷ்,  அப்படி எதுவும் கன்ஃபார்ம் ஆகல. அவருக்கு ஸ்கிரிப்ட் பன்றது டஃப்பான விஷயம். அட்லிக்கு உண்மையிலே பெரிய ஹேட்ஸ் ஆஃப் சொல்லணும். அவர் ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக இருக்காரு.  அவருக்கு ஸ்கிரிப்ட் பண்ணி அவர கன்வின்ஸ் பன்றது சேலஞ்சிங்கான விஷயம். அவருக்கு நிறையை  ரெஸ்பான்ஸ்பிலிட்டி இருக்கு.  யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாதுனு பார்ப்பாரு. மேலும் அவரு ஃபுல் ஸ்கிரிப்ட் தான் கேட்பாரு. அப்படி எதுவும் ஸ்கிரிப்ட் அமையல.

அப்படி அவரை வைத்து ஒரு படம் இயக்கினேன் என்றால் அது எல்லோருக்கும் பிடிச்ச படமாக இருக்கும். ஹியூமர் அதிகமாக இருக்கும். ஏனெனில் அவர் ரொம்ப நல்லா ஹியூமர் பண்ணுவாரு. ஹியூமருக்கு ஸ்கோப் உள்ள படம் தான் பண்ண முடியும். என்னுடைய ஸ்ட்ரென்த் அது. விஜய் சார் கிட்ஸ்க்குலாம் புடிச்ச மாதிரி பண்ணிடுவாரு. என்றார்.

'தளபதியை வைத்து நான் இயக்கும் படம்..?' - இயக்குநர் ராஜேஷ் பதில் வீடியோ