'ரஜினி படம்னாலும் கத நல்லா இல்லன்றான்' - தனது திரை அனுபங்கள் குறித்து பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 'மணல் கயிறு', 'சம்சாரம் அது மின்சாரம்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களின் இயக்குநராகவும் நடிகராகவும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் விசு. கே.பாலசந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

Director Visu Speaks about Superstar Rajinikanth's Thillu Mullu

குறிப்பாக 'தில்லு முல்லு' படத்தின் வசனம் இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சின்னத்திரையில் அரட்டை அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சியின் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமா குறித்து தனது அனுபங்கள் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது 'தில்லு முல்லு' படத்தில் ரஜினிகாந்த்திற்கு அந்த வேடம் பொருத்தமாக இருக்கமாட்டார் என்று அனைவருக்கும் தோன்றியது. நான் இந்த படத்துக்கு எழுதும் போது பயந்து கொண்டே எழுதினேன். ஏனெனில் அதற்கு முன் வேறுவிதமான படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் பாலசந்தர் ரஜினி தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதனால் அந்த படத்தின் முழு கிரெடிட்டும் பாலசந்தருக்கு தான். மேலும் ரஜினியும் நடிப்புக்கு ஈடு இணையே இல்ல. பூவோட சேர்ந்து நாரும் மணக்கும் என்பதற்கேற்ப அவங்க ரெண்டு பேரோட சேர்ந்து  நானும்  மணந்துட்டேன் என்றார். அப்போது இந்த எழுத்தாளர்களுக்கான பங்கு குறைந்து விட்டது. அதனால் ரஜினி படம்னாளு கத நல்லா இல்லன்றான்' என்று குறிப்பிட்டார்.

'ரஜினி படம்னாலும் கத நல்லா இல்லன்றான்' - தனது திரை அனுபங்கள் குறித்து பிரபல இயக்குநர் வீடியோ