''விஸ்வாசம்', 'நம்ம வீட்டுப் பிள்ளை' படங்களுக்கு பிறகு....'' - 'தலைவர் 168' படம் பற்றி டி.இமான் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பேட்ட' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'தர்பார்' படத்தில் நடித்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். 

D Imman tweets about Siva and Rajinikanth's Thalaivar 168

அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும் படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் சிவா  இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்துக்கு இமான் இசையமைக்கவிருக்கிறார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டி.இமான், தலைவர் 168 படத்துக்கு இசையமைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடவுள் அருளாலும், உங்கள் ஆசிர்வாதங்களாலும் நான் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன். விஸ்வாசம் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை படங்களுக்கு பிறகு அன்புக்குரிய இயக்குநர் சிவாவுடனும், சன்பிக்சர்ஸ் உடனும் பணிபுரிவதிலும் கௌரவமாக இருக்கிறது.